Wednesday, 24 July 2013

தேசாபிமானி N.E.மணி ஐயர்

தேசாபிமானி N.E.மணி ஐயர்:

பள்ளிபாளையம் பாலம் வருவதற்க்கும் , அரசு பள்ளிகள் வருவத்ற்க்கும் இவரே காரணமானவர்,சுதந்திர போராட்ட தியாகி , மூன்று முதலமைச்சர்க்கு (சுப்ராயன்,ராஜாஜி,காமராஜர்)நெருங்கிய நண்பர். நாட்டிற்க்காக தனது 9 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்.தியாகி pensionகூட வேண்டாம் என்றவர்,(என் நாட்டிற்க்காக போராடியதற்க்கு எனக்கு எதற்க்கு pension என்று சொன்னவர்). மக்கள் மறந்துபோன இந்த தேசாபிமானியின் வரலாற்று பக்கங்கள் சிலவற்றை இன்றைய தலைமுறைக்கு நினைவுபடுத்துவோம்.


துவக்கம்:

                1927-ஆம்  ஆண்டு  முதல் 1956 வரை பள்ளிபாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி & தாலுகா, கமிட்டி செயலாளராகப் பணி புரிந்தார். திருச்செங்கோடு தாலுகா, காங்கிரஸ் கமிட்டியில் சில காலம் நிர்வாக அங்கத்தினராகவும் பிறகு செயலாளராகவும் பணிபுரிந்தார். மாவட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில் சுமார் 10 ஆண்டுகள் அங்கத்தினராகவும் கைத்தறி நெசவாளர் பிரிவில் (Labour section) மாவட்டம் முழுவதும் சுற்றி ஒரு மாவட்ட கைத்தறி நெசவாளர் மாநாடு கூட்டி செயல்பட்டார்.

காவிரி நதிக்குப் பாலம்

             1927-ஆம் ஆண்டிலிருந்து ஈரோடு - பள்ளிபாளையம் மத்தியில் உள்ள காவிரி நதிக்கு ஒரு பாலம் ஏற்படத் தீவிர முயற்சி மேற்கொண்டு தமிழக முதலமைச்சராக இருந்த திரு. K.காமராஜ் அவர்களால் 1957-ல் கால்கோல் விழா நடத்தி 1960 ஆம் ஆண்டு சுமார் 13 லட்சம் செலவில் ஒரு புதிய சிறந்த பாலம் ஏற்படக் காரணமாக இருந்தார்.


1944-55 ஆண்டு வரை 

            சேலம் ரெயில் பிரயாணிகள் சங்க நிர்வாகக் கமிட்டியில் சில ஆண்டுகள் அங்கத்தினராக இருந்தார். பள்ளிபாளையம் உயர் நிலைப்பள்ளி கட்டிடக் கமிட்டிக்கு செயலாளராக (பதிவு செய்தது) இருந்து பொது மக்களிடம் நன்கொடை மூலம் பணம் வசூலித்து மற்றவர்கள் பாராட்டும் முறையில் பணிபுரிந்தார். தற்போது பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். தனக்கு வசதி இல்லாமலிருந்தும் ரூ.5000 க்கு 1956ல் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து 15 ஆண்டுகள் பிரீமியம் கட்டி அந்த பாலிசியை கோவை L.I.C.டிவிசனல் மேனேஜர் மூலம் 1964ம் ஆண்டு ஒரு விழா நடத்தி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். அத்தொகை தற்சமயம் போனஸ் உள்பட ரூ.10,000 வரை கிடைக்கலாம்.
           
             பள்ளிபாளையம் மாடல் ஹரிஜனக் கமிட்டிச் செயலாளராக சில காலம் பணி புரிந்தார். தன் வாழ்நாளில் ஹரிஜன மின்னேற்றத்திற்காக தீண்டாமையை ஒழிக்க இன்னும் தொடர்ந்து தன்னால் இயன்ற சேவை புரிந்து வருகிறார்.

1939-40ம் ஆண்டு வரை 

             காந்திஜி அவர்களால் துவக்கப்பட்ட தனிப்பட்ட சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு தேச விடுதலைக்காகப் போராடி கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார் (defence of Indian Rules) 

1954-57ம் ஆண்டு வரை

             சேலம் ஜில்லா போர்டு அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சுயநலமில்லாத ஊலலற்ற முறையில் , மாவட்ட அளவில் சேவை செய்து ஜில்லா போர்டு காங்கிரஸ் கட்சித் தலைவ்ராக  சில காலம் பணிபுரிந்தார். பள்ளிபாளையம் சன்மார்க்க சங்க செயலாளராக பல வருடம் சேவை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

1939-54ம் ஆண்டு வரை

             மாவட்ட  மதுவிலக்கு கமிட்டி போன்றவைகளில் சுமார் 15 வருடம் பணிபுரிந்து திறம்பட மதுவிலக்கு வெற்றிபெற பாடுபட்டார். 1971ல் மாநில மதுவிலக்கு மாநாடு சேலத்தில் நடைபெற காரணமாக இருந்தும், சேலம் மாவட்ட மதுவிலக்கு செயல்கமிட்டி செயலாளராகவும் இருந்தார்.


மதுவிலக்கு பாதயாத்திரை

             மதுவிலக்குக்காக ஒரு பாதயாத்திரை மேற்கொண்டு தியாகி கவிஞர். திரு. கந்தசாமி மற்றும் 15 பண்பட்ட ஊழியர்களுடன் 21 நாள் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். 15-04-1972ல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கட்டிடம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு 9-ம் நாள் தற்கொலை செய்ய முயன்றதாக 309வது பிரிவின்படி கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார். திரு.ராஜாஜியும், திரு.காமராஜரும் மற்றும் பல தலைவர்களும் உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ள அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரதத்தினை கைவிட்டார். மாவட்டம் முழுவதும் கள்ளுக்கடை, சாராயக்கடை முன் மறியல் செய்ய கமிட்டிகள் அமைத்து ஏராளமானவர்களுடன் அவரும் கைதாகி பின் விடுதலையானார்.
        
              


பூமிதானம்:
          திருச்செங்கோடு தாலுக்கா பூமிதானக் கமிட்டி கன்வீனராக இருந்து பலரிடம் நிலம் தானமாகப் பெற்றும், தன் நிலத்தில் 1/4 பாகத்தை (2ஏ . 29 சென்ட்) தானமாக அளித்தார். (சில காலம் கழித்து தியாகிகள் நிலத்தை தானமாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மாவட்ட பூமி தானக்கமிட்டி தீர்மானித்துள்ளதாக செயலாளர் மூலம் தெரிய வந்தது).  நாட்டிற்க்காக தனது 9 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்.

 கூட்டுறவுத்துறையில் 41 வருட சேவை


          1938-ல் பஞ்சாயத்து மெம்பர், 1939-58 வரை இக்கிய நாணயச் சங்க செயலாளர், 1958-76 வரை கூட்டுறவு விவசாய வங்கி பொருளாளராக  பணிபுரிந்தார். விவசாய சேவா சங்கமாக மாற்றப்பட்டதிலிருந்து  நிர்வாகக்கமிட்டி அங்கத்தினராக இருந்தார்.

கூட்டுறவு நெசவாளர் சங்கத் தலைவர்

             1946-70 வரை 24 ஆண்டுகள் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத் தலைவராக பணிபுரிந்து நெசவாளர் பொருளாதார நிலை உயர வேலை செய்தார்.  சங்கத்தின் சொந்த நிதியைக் கொண்டே சங்கம் மிகச் சிறந்த முறையில் மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக பணிபுரிந்தது என்றால் அது மிகையாகாது.

   பள்ளிபாளையம் தேசிய கைத்தறிநெசவாளர் சங்கத் தலைவராக சில காலமும், மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க உபத்தலைவர்,  உணவுக்கமிட்டித் தலைவர்,  தறிகள் பார்வை கமிட்டித் தலைவராகவும் இருந்தார்.  காந்தி ஆசிரமத்துடன் பல வருடங்களாகத் தொடர்புகொண்டு உள்ளார்.  சில வருடங்களாக அரசியலில் இருந்து விலகி சர்வோதய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

கூட்டுறவு பண்டகசாலை துவக்கம்

 1946-ல் கொங்கணாபுரம் ஜமீந்தார் சிறந்த கூட்டுறவாளரான திரு.K.A.நாச்சியப்ப கவுண்டர் அவர்கள் தலைமையில் ஒரு கூட்டுறவு பண்டகசாலையை கூட்டுறவு துணைப்பதிவாளர்  திரு.அப்பாண்டராஜன் B.A அவர்களால் திறந்து வைக்கப்பட்டு  தன் சொந்த  நிதியால் சுற்றுப்புற மக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஆரம்ப காலத்தில் செயலாளராகவும், பிறகு சில காலம் தலைவராகவும் பணிபுரிந்து வந்தார்.  1939-58 வரை பள்ளிபாளையம் உஷார் கமிட்டித் தலைவராகவும் இருந்து வந்தார்.

                 1961 ஆம் ஆண்டு ஒரு கிராமிய கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் துவக்க 2 1/2 ஏக்கர்  நிலம்  விலைக்கு வாங்கி காலனி முறையில் Lay out போட்டு D.T.P. அங்கீகாரம் பெறப்பட்டு அரசு கடன் வாங்கி சுகாதார முறையில் மனைகள் கட்டியுள்ளனர். சிலர்  சொந்த பணத்தைக் கொண்டு மனைகள் கட்டியுள்ளனர். தற்போதைய நிலையில் நிலம் கட்டிடம் மதிப்பு  பல மடங்கு ஏறியுள்ளது.  

கூட்டுறவு பால் வழங்கும் சங்கம்

                    எல்லா மக்களுக்கும் நல்ல தரமான பால் வழங்க ஒரு கூட்டுறவு பால் விநியோகம் செய்யும் சங்கத்தை 1964-ல்  திரு. N.E.மணி அவர்களை (Chief Promoter) ஆகக்  கொண்டு  துவக்கி, அந்த சங்கம் கிராம விவசாயிகளிடம் நல்ல பாலை பெற்று, (S.P.B) காகித ஆலை சிற்றுண்டியகத்திற்கு விநியோகம் செய்து வருகிறது. 

தாய்சேய் நல விடுதி

                    ஒரு தாய்சேய் நலவிடுதி கட்ட திரு P.S.A குருநாத செட்டியார் அவர்களிடம் 1956 ம் வருடத்தில் தானமாக ஒரு இடம் பெறப்பட்டு  திரு.T.M.காளியண்ணன், M.A.B.Com, M L A . தலைமையில் தலைவர் திரு.V.G.வேணுகோபால்  நாயுடு ஜில்லா போர்டு உபதலைவர் அவர்களால் அந்த தாய்சேய் நலவிடுதி திறக்கப்பட்டது.

                 1937-ல் பள்ளிபாளையத்தில் நடைப்பெற்ற , தாலுக்கா அரசியல் மகாநாட்டில் செயலாளராக பணிபுரிந்து பலருடைய பாரட்டுதலைப் பெற்றார்.

               1953ல்  மேட்டூர் S.P.B. INTUC. சங்கத்தின் முதல் தலைவராக பணிப்புரிந்தார்.

L.I.C  பிரிமியம்

                 பள்ளிபாளையம் சுற்றுப்புறக் கிராம மக்கள் உட்பட யாவரும் திருச்செங்கோடுச் சென்று கட்ட வேண்டிய இன்சூரன்ஸ் பணத்தைப் பள்ளிபாளையம் (F.S.C.S.)-ல் செலுத்த முயற்சிச் செய்து வசூலிக்கப்பட்டு வருகிறது. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் 1959லிருந்து 73 வரை நிர்வாகஸ்தராக பணிப்புரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது  (தொண்டு செய்ய) 

காந்திஜி மறைவு காலம்:
               காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று (1948) பள்ளிபாளையத்தில் வகுப்புக் கலவரம் ஏற்படாமல் தடுக்கப் பல தொண்டர்களுடன் பணிப்புரிந்தார். மேற்படி நிகழ்ச்சியை அப்போதைய அமைச்சராக  இருந்த  டாக்டர்.சுப்பராயன் அவர்கள் மிகவும் பாரட்டினார். தன்னை ஒரு முழுநேர கெளரவ சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.


             சுற்றிலும் சுயநலம், பதவிப் போட்டி பொறாமை, வகுப்பு வாதம் போன்ற தீயசக்திகள் மலிந்துள்ள இந்த நிலையில் அமைதியான முறையில் விளம்பரம் இல்லாமல்  தேசத்துக்கும் கூட்டுறவுத் துறைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவரை பற்றி எழுதியதில் பெருமிதம் கொள்வோம்.

இறுதியாக தியாகிகள் பென்சன் கூட கேட்கவும் இல்லை. வலியமாக கொடுக்க வந்தபோதும், என் தேசத்திற்கு நான் வேலை செய்தேன், தற்கு எதற்கு பணம் என்று சொல்லிவிட்டார்..! இவரின் வாரிசு தற்போது கொக்கராயன்பேட்டை கிராமத்தில் மாவு அரைத்து தரும் தொழில் செய்து வருகிறார். 

No comments:

Post a Comment